
காபூல்: ஜூன் 29-
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர்.கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையின் பிராந்திய தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கிய அடுத்த நாளே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. கராச்சி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.


















