Home செய்திகள் தேசிய செய்திகள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 19- கேரளத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள விழிஞ்​ஞம் சர்வ​தேச ஆழ்​கடல் துறை​முகத்​தில் முழு அளவி​லான ஏற்​றுமதி மற்​றும் இறக்​குமதி வர்த்தக நடவடிக்​கைகளைக் கேரள முதல்​வர் வி.டி.சதீசன் அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று தொடங்கி வைத்​தார். துறை​முகத்​தின் நுழை​வாயி​லில் இருந்து சரக்​கு​களை ஏற்​றிச் செல்​லும் கன்​டெய்​னரை கொடியசைத்து அனுப்பி வைத்து முதல்​வர் வி.டி. சதீசன் பேசி​ய​தாவது: விழிஞ்​ஞம் சர்​வ​தேச துறை​முகத்​தில் வணிக ரீதியி​லான வர்த்​தகம் தொடங்​கி​யிருப்​பது கேரள வரலாற்​றில் ஒரு மிக முக்​கிய​மான நாளாகும். உலகளா​விய வர்த்​தகத்​திற்​கான புதிய வாசல் இன்று திறக்​கப்​பட்​டுள்​ளது. இத்​துறை​முகத்​தின் மூலம் கிடைக்​கும் வாய்ப்​பு​களைப் பயன்​படுத்தி மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்​சி​யை​யும், புதிய வேலை​வாய்ப்​பு​களை​யும் உறுதி செய்ய வேண்​டும். ‘மிஷன் சமுத்ரா’ திட்​டத்​தின் கீழ் கேரளத்​தின் முக்​கி​யத் துறை​முகங்​கள் மற்​றும் 600 கி.மீ நீள​முள்ள கடற்​கரைப் பகு​தி​கள் இணைக்கப்பட்டு, மாநிலம் ஒரு பெரிய கடல்​சார் வர்த்தக மையமாக மாற்​றப்​படும். இவ்​வாறு கேரள முதல்​வர் வி.டி. சதீசன் பேசி​னார்.