
பெங்களூர், ஆகஸ்ட் 19- தமிழகத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அது பற்றி நாங்கள் எதாவது பேசினோமா? துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை அது எங்கள் மாநில விவகாரம். எந்த மதம், எந்த சமூகம், தமிழர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் கன்னடர்கள்தான். நாங்கள் பார்த்துக்கொள்வோம் என கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேசினார். கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து தமிழ்நாடு தலையிடுவது தேவையில்லாத வேலை.. எங்கள் மாநிலத்தை பாதுகாத்துக்கொள்ள எங்களுக்கு தெரியும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இந்த விவகாரம் பற்றி நேற்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் இதே கருத்தை முன்வைத்து இருக்கிறார். அதேபோல கரூர் சம்பவத்தையும் இழுத்து பேசியிருக்கிறார். ராமலிங்க ரெட்டி பேசியதாவது:- இது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட விவகாரம். அவர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும். அவர்கள் ஏன் எங்கள் விவகாரங்களில் தலையிடுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார்.













