
மும்பை, மே 23- ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றின் முக்கிய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வெற்றியைப் பதிவு செய்தது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்தாக அமைந்தது. IPL 2026 Follow Every Match. Track Every Moment. போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, பெங்களூரு அணிக்கு 256 ரன்கள் என்ற ஒரு பெரிய இலக்கைக் கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி, வெறும் 4 ஓவர்களில் 45 ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தனர். ஹெட் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரஷீக் சலாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடினார். இவர் இஷான் கிஷனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில், சியாஷ் சர்மா பந்துவீச்சில் வீழ்ந்தார். இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் கூட்டணி நடு ஓவர்களில் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 113 ரன்கள் partnership அமைத்து, இருவரும் அரைசதமடித்து அசத்தினர். கிளாசன் 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நித்திஷ் குமார் ரெட்டி வெறும் 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசி explosive cameo கொடுத்தார். இதன்மூலம், சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்து, வலுவான ஸ்கோரை எட்டியது.





















