இடுக்கி சுற்றுலா பகுதிகளை 9 நாட்களில் பார்வையிட்ட 1.82 லட்சம் பயணிகள்

மூணாறு, டிச. 30- கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளுக்கு கடந்த ஒன்பது நாட்களில் ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து 107 பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.இம்மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமாக மூணாறு, வாகமண் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.அவற்றிற்கு கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி 9 நாட்களில் ஒரு லட்சத்து, 82ஆயிரத்து 107 சுற்றுலா பயணிகள் சென்றனர். டிச., 25, 26ல் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. மிகவும் கூடுதலாக வாகமண்ணுக்கு சென்றனர். கடந்த காலங்களில் பயணிகள் வருகையில் மூணாறு முதலிடம் வகித்த நிலையில், சமீப காலமாக வாகமண் முதலிடம் வகிக்கிறது. சுற்றுலா பகுதிகளுக்கு டிச., 20 முதல் 28 வரை சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருமாறு: மாட்டுபட்டி அணை – 3822, ராமக்கல்மேடு – 17,879, அருவிக்குழி – 2015, ஸ்ரீநாராயணபுரம் – 9103, வாகமண் மலை குன்று – 50,985, வாகமண் சாகச பூங்கா – 43,311, பாஞ்சாலிமேடு – 13,524, இடுக்கி ஹில் வியூ பூங்கா – 8189, மூணாறு தாவரவியல் பூங்கா – 25,581, ஆமைப்பாறை – 7698. இதுதவிர மின்வாரியம், வனத்துறை ஆகியவற்றுக்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள், மீசை புலி மலை உள்ளிட்ட மலை பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்றனர்.