Home மாவட்டங்கள் பெங்களூர் இடைத்தேர்தல் தடை: முழு விவரம்

இடைத்தேர்தல் தடை: முழு விவரம்

சென்னை: ஜூலை 11-
தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், திருச்சி கிழக்​கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகு​தியை ராஜி​னாமா செய்​தார். இந்த நிலையில் திருச்சி கிழக்​கில் அவர் வெற்றி பெற்​றதை எதிர்த்​து, அத்​தொகுதி திமுக வேட்​பாளர் இனிகோ இருதய​ராஜ் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.இதே​போல, கரூரில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தவெக வேட்​பாளர் வி.பி.ம​தி​யழகன், விராலிமலை​யில் சி.​விஜய​பாஸ்​கரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் கே.கே.செல்​லப்​பாண்​டியன், பெருந்​துறை​யில் எஸ்​.ஜெயக்​கு​மாரின் (அதி​முக) வெற்​றியை எதிர்த்து திமுக வேட்​பாளர் தோப்பு வெங்​க​டாச்​சலம் ஆகியோர் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளனர்.
அம்​பாச​முத்​திரத்​தில் இசக்கி சுப்​பையா (அதி​முக) வெற்றி பெற்​றது செல்​லாது என்று அறிவிக்​கக் கோரி தொகுதி வாக்​காளர் காந்​தி​ம​தி​நாதன் தேர்​தல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.
இதற்​கிடையே, அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 பேரும் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர். இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள மேற்​கண்ட 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு​மாறும், தேர்​தல் அறி​விப்பை வெளி​யிடக் கூடாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடு​மாறும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.
‘தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​போது இடைத் தேர்​தல் நடத்​தப்​பட்​டால், வழக்​கின் நோக்​கம் அர்த்​தமற்​ற​தாகி​விடும். வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​துக் கொண்டு இடைத் தேர்​தலை நடத்​தி​னால், தேவையற்ற சட்ட சிக்​கலை ஏற்​படுத்​தி​விடும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதம்: மனு​தா​ரர் தரப்​பு வழக்​கறிஞர் வி.ஆர்​.சண்​முக​நாதன்: நிலுவை வழக்கு விசா​ரணைக்​குப் பிறகு, தேர்​தலில் தோல்​வி அடைந்​தவரை வெற்றி பெற்​றவ​ராக உயர் நீதி​மன்​றம் ஒரு​வேளை அறிவிக்​கக்​கூடும். அதே நேரம், இடைத் தேர்​தலில் ஒரு எம்​எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்​டால், ஒரே தொகு​திக்கு 2 எம்​எல்​ஏக்கள் என்ற நிலை உரு​வாகும். எனவே, தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கும்​வரை அந்த தொகு​தி​களுக்கு இடைத் தேர்​தல் நடத்​தக்கூடாது என உச்ச நீதி​மன்​றம் பல​ வழக்​கு​களில் தீர்ப்​பளித்​துள்ளது.