Home மாவட்டங்கள் பெங்களூர் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு

பெங்களூர்: ஆக. 15-
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு 15,000 கனஅடி நீர் வர உள்ளது.
காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பிறர் தாக்கல் செய்த மனுக்கள், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கர்நாடக அரசு தற்போது கூடுதல் காவிரி நீரை திறந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திறப்பால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.