Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவின் 5-வது எஸ்-400 அமைப்பு 2027 பிப்ரவரியில் செயல்பாட்டுக்கு வரும்

இந்தியாவின் 5-வது எஸ்-400 அமைப்பு 2027 பிப்ரவரியில் செயல்பாட்டுக்கு வரும்

புதுடெல்லி, நவ. 28-
இந்தியா, கடந்த 2018-ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து ரூ.51,838 கோடியில் 5 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதுவரை 4 எஸ்-400 அமைப்புகளை ரஷியா இந்தியாவுக்கு விநியோகம் செய்துள்ளது. இந்தியாவின் 5-வது மற்றும் இறுதி எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடம் இருந்து பெறக்கூடும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பல கட்டங்களாகப் பிரித்து அனுப்பப்படும் இந்த அமைப்பு, 2027 பிப்ரவரிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, வரும் டிசம்பர் மாதம் இந்திய விமானப்படைக் குழு ரஷியாவுக்குச் செல்ல உள்ளது. 5-வது எஸ்-400 அமைப்பு இந்தியாவை வந்தடைவதன் மூலம், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும். வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, கூடுதலாக 5 எஸ்-400 அமைப்புகளை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.