Home செய்திகள் தேசிய செய்திகள் இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு

இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு

மும்பை, நவ. 3-
தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (எப்ஆர்ஆர்ஓ) சார்பில் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று மும்பை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன்பேரில், இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார். இம்ரான் கான் அளித்த மன்னிப்பையும் உறுதிமொழியையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேவேளை, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு எப்ஆர்ஆஓ அனுப்பிய நோட்டீஸ் மீதான இடைக்காலத் தடையை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்தது.