Home செய்திகள் தேசிய செய்திகள் இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்

இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்

புதுடெல்லி: ஜூன் 25–-
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.
இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​பட்டு வந்​தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா தடை விதித்​திருந்​தது. இதை ஐரோப்​பிய நாடு​களும் பின்​பற்றி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதைத் தவிர்த்து வளை​குடா நாடு​களிடம் கச்சா எண்​ணெய் வாங்​கத் தொடங்​கின. ரஷ்​யா​விடம் இருந்து சீனா மற்​றும் இந்​தியா போன்ற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால்​தான், உக்ரைன் போரை தொடர்ந்து நடத்​து​வதற்​கான நிதி ரஷ்​யா​வுக்கு கிடைப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.
இதற்கு அபராத​மாக இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா விதித்த இறக்​குமதி வரி 50 சதவீத​மாக உயர்ந்​தது. இது அமெரிக்கா​வுக்​கான இந்​திய ஏற்​றும​தி​யைக் கடுமை​யாக பாதித்​தது. இதன் காரண​மாக இந்​தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது.
இதையடுத்து ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்குமதியை இந்​தியா குறைக்​கத் தொடங்​கியது. அதன்​பின் இந்​தியா – அமெரிக்கா வர்த்​தகம் தொடர்​பான பேச்சுவார்த்தைகள் மீண்​டும் தொடங்​கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்​கா​வில் இருந்து 500 பில்​லியன் டாலர் அளவுக்கு இறக்​குமதி செய்​ய​வும், முதலீடு செய்​ய​வும் இந்​தியா உறு​தி​யளித்​துள்​ளது. இதன் காரண​மாக, இந்​திய ஏற்​றும​தி​கள் மீது விதிக்​கப்​பட்ட வரி 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக் கொண்​டது. பிரான்​ஸில் நடை​பெற்ற ஜி7 கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்​குப் பின் நேரில் சந்​தித்து பேசினர். அப்​போது இந்​தியா – அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.
டெல்​லி​யில் 2 நாட்​கள் நடை​பெற்ற வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை வெற்​றிகர​மாக முடிந்​துள்​ளது. இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் அடுத்​தகட்​ட​மாக ஒப்​பந்​தம் மேற்​கொள்​வதற்​கான நடவடிக்​கை​களில் இருதரப்​பும் மீண்​டும் ஆலோ​சனை நடத்​தும்​ என்​று மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.