Home விளையாட்டு உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அசத்தல் வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அசத்தல் வெற்றி

ஆம்ஸ்டல்வீன், ஆக. 16- உல​கக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நேற்று தொடங்​கியது. 16 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்​தத் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய ஆடவர் அணி நேற்று தனது முதல் லீக் ஆட்​டத்​தில் வேல்ஸ் அணி​யுடன் மோதி​யது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. ஆட்​டத்​தின் 8-வது நிமிடத்​தில் சஞ்​ஜய் அடித்த கோல் காரண​மாக இந்​திய அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. இதன் பின்​னர் 11 மற்றும் 43-வது நிமிடங்​களில் கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்பு​களை இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஹர்​மன்​பிரீத் சிங் கோலாக மாற்​றி​னார். வேல்ஸ் அணி தரப்​பில் 56-வது நிமிடத்​தில் சாம் வெல்ஷ் ஒரு கோல் அடித்​தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (17-ம் தேதி) இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் 19-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி. ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஜெர்​மனி 5-1 என்ற கோல் கணக்​கில் மலேசி​யாவை வீழ்த்​தி​யது. வேல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் இந்​திய அணியின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் கூறிய​தாவது: நாங்​கள் நன்​றாக விளை​யாடினோம். வாய்ப்​பு​களை உரு​வாக்கி கோல்​கள் அடிப்​பதே எங்​கள் இலக்​காக இருந்​தது. யார் ஆட்​ட​நாயகன் விருது பெறுகிறார்​கள் அல்​லது யார் கோல் அடிக்​கிறார்​கள் என்​பது முக்​கியமல்ல. எங்​களுக்கு கோல்​கள் மட்​டுமே தேவை. அந்த எண்​ணத்​துடன்​தான் விளை​யாடினோம், தொடரை வெற்​றியோடு தொடங்​கு​வது முக்​கிய​மாக இருந்​தது. நாங்​கள் 3-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று மூன்று புள்​ளி​களைக் கைப்​பற்றி உள்​ளோம். எங்​களால் முடிந்​தவரை சிறப்​பாகச் செயல்​பட்​டோம். ஆனால் வேல்ஸ் அணி வீரர்​களும் நன்​றாக விளை​யாடி​னார்​கள். இது முதல் போட்டி மட்​டுமே, வரும் போட்​டிகளில் தவறுகளைத் தவிர்க்க முயற்சி செய்​வோம். எங்​கள் முன்கள ஆட்​டக்​காரர்​கள் சிறப்​பாகச் செயல்​பட்டு பல பெனால்டி கார்​னர் வாய்ப்​பு​களைப் பெற்​றுத் தந்​தனர். அவர்​கள் ஃபீல்ட் கோல்​கள் அடித்​தா​லும் அல்​லது பெனால்டி கார்​னர்​களை உரு​வாக்​கி​னாலும், அணிக்கு கோல்​கள் மட்​டுமே முக்​கி​யம். தற்​போது அணி​யின் கவனம் உலகக்​கோப்​பையை வெல்​வ​தில்​தான் உள்​ளது. இவ்​வாறு ஹர்​மன்​பிரீத்​ சிங்​ கூறி​னார்.