Home மாவட்டங்கள் பெங்களூர் உலகின் சிறந்த இரவுப் பொழுதுகள் பட்டியலில் பெங்களூரு

உலகின் சிறந்த இரவுப் பொழுதுகள் பட்டியலில் பெங்களூரு

பெங்களூரு: செப்டம்பர் 1
உலகளவில் புகழ் பெற்ற ‘டைம் அவுட்’ நிறுவனம், ‘இன்ட்ரெபிட் டிராவல்’ அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2026-ம் ஆண்டுக்கான ‘உலகின் சிறந்த 20 இரவுப்பொழுது நகரங்கள்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு, 17-ம் இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் உணவு மற்றும் கலாச்சாரத்திற்காக பெங்களூரு ஏற்கெனவே 13-ம் இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது இரவுக் கலாச்சாரத்திலும் உலக வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது.
இரவுப் பொழுது அமைப்புகளின் தரம், பாதுகாப்பு, கட்டண மலிவு, சமூகக் கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூர் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் சர்வதேச வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.