Home செய்திகள் தேசிய செய்திகள் எப்சிஆர்ஏ மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்

எப்சிஆர்ஏ மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: ஆக. 12-
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்​டுப்​பாடு விதிக்கும் எப்​சிஆர்ஏ மசோ​தாவை நாடாளு​மன்ற கூட்​டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மத்திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.
வெளி​நாடு​களில் இருந்து இந்​திய தொண்டு நிறு​வனங்​களுக்கு அனுப்​பப்​படும் நன்​கொடைகளை வரன்​முறைப்​படுத்த வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா (எப்​சிஆர்ஏ) கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவை நடப்பு மழைக்​கால கூட்​டத் தொடரில் நிறைவேற்ற மத்​திய அரசு முனைப்பு காட்​டியது.ஆனால் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், எப்​சிஆர்ஏ மசோ​தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. ஆளும் பாஜக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் வடகிழக்கு மாநிலங்​களை சேர்ந்த சில கட்​சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தி உள்​ளன.இதுதொடர்​பாக பாஜக மூத்த எம்பி ஒரு​வர் கூறும்​போது, “எப்சிஆர்ஏ மசோ​தாவை காங்​கிரஸ், திரிண​மூல் காங்​கிரஸ் கட்சிகள் கடுமை​யாக எதிர்க்​கின்​றன. அந்த கட்​சிகள் மசோ​தாவை கைவிட கோரு​கின்​றன. வேறு சில கட்​சிகள் மசோ​தாவை, நாடாளு​மன்ற கூட்​டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப கோரி வருகின்​றன.
நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு பல்​வேறு எதிர்க்​கட்​சிகளின் தலை​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இதில் மசோ​தாவை நாடாளு​மன்ற கூட்​டுக் குழுவுக்கு அனுப்ப ஒரு​மித்த கருத்து எட்​டப்​பட்டு உள்​ளது. எனவே நடப்பு கூட்​டத் தொடரில் எப்​சிஆர்ஏ மசோதா எடுத்​துக் கொள்ளப்ப​டாது. இந்த மசோதா ஜேபிசி-க்கு அனுப்​பப்​படும்” என்றார்.பல்​வேறு கிறிஸ்​தவ, முஸ்​லிம் தொண்டு அமைப்​பு​கள் எப்​சிஆர்ஏ மசோ​தாவுக்கு எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. அந்த அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி உள்​ளனர்.