Home செய்திகள் தேசிய செய்திகள் ஏர் இந்தியா விமான விபத்து ஓராண்டு நிறைவு

ஏர் இந்தியா விமான விபத்து ஓராண்டு நிறைவு

அகமதாபாத்: ஜூன் 13-
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகம​தா​பாத்​திலிருந்து புறப்​பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 சில நிமிடங்​களி​லேயே விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்தில் குஜ​ராத் முன்​னாள் முதல்​வர் விஜய் ரூபானி உள்பட 260 பேர் உயி​ரிழந்​தனர்.இந்த விபத்​திலிருந்து விஸ்வாஸ்​குமார் ரமேஷ் (39) என்​பவர் மட்டும் உயிர்​பிழைத்​தார். விபத்து நடந்த இடத்​திலிருந்து ரத்​தம் தோய்ந்த சட்​டை​யுட​னும், கையில் செல்​போனுடன் இவர் நடந்து வரும் வீடியோ அப்​போது இணை​யத்​தில் வைரலானது.இந்​நிலை​யில் நேற்​றுடன் இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்​துள்​ளது. ஆனாலும் இந்த படு​ப​யங்​கர​மான இந்த விபத்தை மறக்க முடி​யாமல் தவித்து வரு​கிறார் விஷ்​வாஸ் குமார் ரமேஷ்.இதுகுறித்து தனது ஆலோ​சகர் சஞ்​சீவ் படேல் என்​பவர் மூலம் அவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “விபத்து இப்​போது​தான் நடந்​தது போல் இருக்​கிறது. ஆனால் ஓராண்டு கடந்து விட்​டது. ஓராண்​டாகி​யும் தூக்​கம் இல்​லாத இரவுகள், பதற்​றம், மறக்க முடி​யாத நினை​வு​களு​டன் நான் தவித்து வரு​கிறேன்.
விபத்து நடந்து முடிந்து ஓராண்​டுக்​குப் பிறகும், நான் என் வாழ்க்​கையை மீண்​டும் கட்​டமைக்​க​வும், என்​னால் இயன்​றவரை என் குடும்​பத்​துக்கு ஆதர​வளிக்​க​வும் தொடர்ந்து முயற்​சித்து வருகிறேன். இந்த விபத்​தில் எனது சகோ​தரர் அஜயை நான் இழந்து​விட்​டேன்’’ என்​றார்.இந்த விபத்து தொடர்​பாக ஏர் இந்​தியா செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறும்​போது, “ஏஐ-171 விமான விபத்​தால் பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு​வருக்​கும் அக்​கறை​யுட​னும் கருணை​யுட​னும் ஆதர​வளிக்க ஏர் இந்​தியா நிறு​வனம் தொடர்ந்து உறு​தி பூண்​டுள்​ளது” என்​றார்.