
தெஹ்ரான், ஜூன் 19- ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் போடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது கடல் முற்றுகையை விலக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். நேரடி தாக்குதல்கள் இல்லாத போதிலும், அமெரிக்கா மறைமுகமாகப் பல வழிகளில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதில் ஒன்று தான் ஹார்முஸை முற்றுகையிடுவது. அமெரிக்கப் படைகள் ஹார்முஸை சுற்றி முற்றுகையிட்டு நின்றது. சீராகும் நிலைமை அதாவது எந்தவொரு கப்பலும் ஈரானுக்குச் செல்ல முடியாதபடி முடக்கியது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே ஈரான் நம்பி இருக்கும் சூழலில், அதை முடக்கும் வகையில் அமெரிக்கா இந்த கடல் முற்றுகையை நடத்தியது. இதனால் ஈரான் பொருளாதாரத்தை காலி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் இலக்காக இருந்தது. இதற்கிடையே இப்போது அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அங்கு நிலைமை சீராகி வருகிறது. அமெரிக்க படைகள் இந்தச் சூழலில் தான் வியாழக்கிழமை அன்று CENTCOM எனப்படும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின்படி, ஈரானிய கடல் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வந்த கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.


















