Home மாவட்டங்கள் பெங்களூர் ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து

ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து

சென்னை: ஏப்ரல் 23-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். காலை முதலே மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் வருகை சிறப்பு கவனத்தை ஈர்த்தது. வாக்களிக்க வருகை தந்த ரஜினிகாந்த் எளிமையான தோற்றத்தில், அமைதியாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் வந்திருந்த அவரது மகள் சௌந்தர்யாவும் வாக்களித்தார். வாக்களித்த பிறகு, வழக்கம்போல் தனது விரலில் மை அடையாளத்தை காட்டி ரசிகர்களுக்கு சைகை செய்தது அங்கு இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான உரிமையும் கடமையும்,ஓட்டு உரிமை இருக்கும் எல்லாம் கண்டிப்பா ஓட்டு போடுங்க என்று வலியுறுத்தினார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாகவே, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அவர் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலானது. எளிமையான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கான நடைமுறையை தொடர்ந்து பின்பற்றும் அவரது தன்மை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.