
சென்னை: மே 24-
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுவதாகவும், தமிழகத்தில் கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அதி கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, குமரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று அல்லது நாளை தொடங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. எனினும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே பெங்களூர், கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையினையும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.