
சாமராஜநகர்: ஜூன் 13-
திருமணம் செய்து வைக்குமாறு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை, தந்தையே சிமெண்ட் செங்கல்லால் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் கர்நாடக மாநிலம் எரகனஹள்ளியில் நடந்துள்ளது.
கட்டிட வேலை செய்து வந்த சித்தராஜு (32) என்ற வாலிபர், தினமும் மது அருந்திவிட்டு தன் பெற்றோர் மற்றும் தங்கையிடம் பல வருடங்களாக சண்டை போட்டு வந்துள்ளார். பெற்றோர் அறிவுரை கூறியும் கேட்காமல் வியாழக்கிழமை இரவும் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை சித்தேகவுடா, சிமெண்ட் செங்கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெரகணாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை கைது செய்துள்ளனர்.



















