
உடுப்பி: ஜூலை 31-
உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்க்கூர்-கசூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ஐவன் ரிச்சர்ட் மாஸ்கரேனஸ் (45) என்பவர், தன் முதல் மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இன்று அதிகாலை அந்தப் பெண்ணுடன் காரில் ‘ஹோலி ரோசரி’ தேவாலயத்தின் எதிரே வந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஐவனை நோக்கி பிஸ்டல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு கொலையாளி தப்பியோடிவிட்டான். காரில் இருந்த பெண் கொலையாளியை அடையாளம் காட்டியுள்ள நிலையில், குந்தாபூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர்.













