
புதுடெல்லி: மே 12-
இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.
முதலில் எல்லாம் நிறுவனங்களிடம் அரசு இந்த மானிய தொகையை நேரடியாக வழங்கியது. எனவே 300, 400 ரூபாய் கொடுத்தாலே போது சிலிண்டர் கிடைத்துவிடும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு சரியான மக்களுக்கு மானியம் சென்று சேர்வதை உறுதி செய்யக்கூடிய நோக்கத்தில் வாடிக்கையாளர் வங்கி கணக்கிலேயே மானிய தொகையை வரவு வைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்து பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அவர்கள் சிலிண்டர் எடுத்தவுடன் அந்த மானிய தொகை என்பது வரவு வைக்கப்படும்இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய பாரத் கேஸ் ,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இண்டேன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு எச்சரிக்கை தகவலை அனுப்ப தொடங்கி இருக்கின்றன. அதாவது உங்களுடைய ஆண்டு வருமானம் மானியம் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருக்கிறது என்பதால் உங்களுக்கு இனி சிலிண்டர் மானியம் ரத்தாகும் என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

















