Home செய்திகள் தேசிய செய்திகள் சவாலான சூழலில் பின்வாங்க கூடாது; மோகன் பாகவத்

சவாலான சூழலில் பின்வாங்க கூடாது; மோகன் பாகவத்

நாக்பூர்: ஜூலை 2-
‘சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது. மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும்,’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சிந்தி சமூகத்தினரால் நடத்தப்படும் சிந்து கல்விச் சங்கத்தின் 75வது நிறுவன தின விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது;
1947ம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல. தங்களின் தாய்நாடு மற்றும் தர்மத்தின் மீதான பற்று காரணமாகப் பெரும் இன்னல்களையும் துயரங்களையும் சகித்துக் கொண்ட போராளிகள். இவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் பல தலைமுறைகளாகத் தாங்கள் உருவாக்கி வளர்த்த செல்வம், நிலம் மற்றும் தொழிலை அப்படியே விட்டுவிட்டு இந்தியாவிற்கு வர முடிவெடுத்தனர்.
பாரதம் மற்றும் எந்தவித அச்சமும் இன்றி தங்களின் மதத்தை பின்தொடர விரும்பியதால் உணர்வு பூர்வமாக இந்தியாவிற்கு வந்தனர்.சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது. மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும். சூழ்நிலைகளுக்கோ அல்லது தலைவிதிக்கோ முன்னால் ஒருபோதும் யாரும் உதவியற்றவர்களாக மாறிவிடக் கூடாது. கடினமான காலங்களிலிருந்து வெளிவர முயற்சி செய்யும் ஒருவரே இறுதியில் வெற்றியடைகிறார், இவ்வாறு அவர் கூறினார்.’