Home செய்திகள் தேசிய செய்திகள் சாபமிட்ட அமித்ஷா – மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்ததால் ஆக்ரோஷம்

சாபமிட்ட அமித்ஷா – மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்ததால் ஆக்ரோஷம்

டெல்லி: ஏப்ரல் 18-
‘’இன்று லோக்சபாவில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. பெண்களுக்கான இடஒதுக்கீடுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்த மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேற்ற விடாமல் தடுத்தன. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதை முதல் முறையாக செய்யவில்லை. மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் 2029 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாபமிட்டுள்ளார். மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் இன்று ஓட்டெடுப்பு நடந்தது. 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும். ஆனால் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவையானதாக இருந்தது. ஆனால் 3 மசோதாக்களையும் தனித்தனியே கொண்டு வந்திருந்தால் எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடன் சேர்த்து தொகுதி மறுவரையறை மசோதாவையும் கொண்டு வந்தது. இதற்கு ஆதரவு அளித்தால் தொகுதி மறுவரையறையை மத்திய அரசால் செய்ய முடியும். இதனால் அந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. லோக்சபாவில் நடந்த வாக்கெடுப்பில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது. மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் இன்று ஓட்டெடுப்பு நடந்தது.3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும். ஆனால் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை.