Home மாவட்டங்கள் பெங்களூர் சென்னையில் புதிய சட்டப்பேரவை

சென்னையில் புதிய சட்டப்பேரவை

சென்னை: செப்.9-
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அரசுக்குச் சொந்தமான ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 25.16 ஏக்கர் நிலத்தை, சென்னை மாநகராட்சி சுமார் 1 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன. விரைவில் நிர்வாக ஒப்புதலையும் அரசு வழங்க உள்ளது.
புதிய தலைமைச் செயலக வளாகம் 15 தளங்களில், சுமார் 20 லட்சம் சதுர அடியளவில் கட்டப்பட உள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.
முதலில் பட்டினப்பாக்கம், கிண்டியிலுள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டி அருகே உள்ள இடம் ஆகிய மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. 25 ஏக்கர் நிலம் கிடைப்பதால் பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்திற்கு அருகே முதல்வர் விஜய்யின் இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 1958ஆம் ஆண்டு அரசு குடியிருப்புகளுக்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.