Home செய்திகள் தேசிய செய்திகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

புதுடெல்லி, ஆகஸ்ட் 30- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்கும் இந்த கூட்டம், ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நடைபெறுகிறது. கடந்த 2026-ம் ஆண்டு செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் முக்கிய மாற்றங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டன. புதிய முடிவுகளின்படி, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. ஆடம்பரமான பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வரி அடுக்குகள் இருந்தன. இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.