Home செய்திகள் தேசிய செய்திகள் மூதாட்டி மீட்பு: நம்பிக்கையின் அடையாளம்

மூதாட்டி மீட்பு: நம்பிக்கையின் அடையாளம்

காத்மாண்டு, ஆகஸ்ட் 30- நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தில், 97 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டதை நம்பிக்கையின் அடையாளமாக கருதுகின்றனர். அங்குள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லம் இடிந்து விழுந்த போது, மூதாட்டி குணா மாயா இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். நேபாள ராணுவம் மற்றும் போலீசார் சுமார் 4 மணி நேரம் போராடி, அவரை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்டபோது, குணா மாயா, போரில் வெற்றி பெற்ற போர் வீரரைப் போல இருந்ததாக கூறினார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. 97 வயது மூதாட்டி ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்ட காட்சி, நேபாள பேரழிவின் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. சேறும் சகதியும் படிந்த ஆடைகளுடன், அவரது முகத்தில் தெரிந்த சோர்வு, இந்த பேரழிவின் தீவிரத்தை உணர்த்துகின்றது. தற்போது, குணா மாயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிர் பிழைப்பு, பேரழிவின் மத்தியில் நம்பிக்கையை ஊட்டுகிறது.