
டில்லி, ஜூலை 21- டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூலை 20) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ராமர் கோவில் நன்கொடை திருட்டு, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தொடர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், குழப்பம் நிலவியதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளும் நேற்று நாள்முழுதும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், எந்தவித முக்கிய அலுவல்களும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று (ஜூலை 21) பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது, எதிர்க்கட்சிகள் அமளியை சமாளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.














