Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு இல்லை

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு இல்லை

தஞ்சாவூர்: ஜூன் 12-
மேட்டூர்: டெல்டா பாசனத்​துக்​காக வழக்​க​மாக ஜூன் 12-ம் தேதி திறக்​கப்​படும் மேட்​டூர் அணை, போதிய நீர் இல்​லாத காரணத்​தால் 62-வது முறை​யாக இந்த ஆண்டு குறித்த தேதி​யில் திறக்​கப்​பட​வில்​லை. அணை திறப்பு தாமத​மாவது குறித்​தோ, குறுவை சிறப்பு தொகுப்பு திட்​டம் குறித்தோ அரசிட​மிருந்து எந்த அறி​விப்​பும் வராத​தால் டெல்டா விவ​சா​யிகள் கவலை​அடைந்​துள்​ளனர்.டெல்டா மாவட்​டங்​களில் விவ​சா​யிகள் குறு​வை, சம்​பா, தாளடி பரு​வங்​களில் நெல் சாகுபடி மேற்​கொள்​வதற்கு 120 அடி கொள்​ளளவு கொண்ட மேட்​டூர் அணை​யில் இருந்து ஆண்​டு​தோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். அதே ​நேரம், அணை​யில் நீர் இருப்​பைப் பொறுத்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்​பாகவோ அல்​லது கால​தாமத​மாகவோ அணை​யில் இருந்து நீர் திறந்து விடப்​படும்.அணை​யில் குறைந்​த​பட்​சம் 90 அடி நீர் இருந்​தால் மட்​டுமே டெல்டா சாகுபடிக்கு முழு​மை​யாக திறக்க முடி​யும். ஆனால் நடப்பு பாசன ஆண்​டுக்கு இன்​று (ஜூன் 12) நீர் திறக்​கப்பட வேண்​டிய நிலை​யில் அணை​யின் நீர்​மட்​டம் 79.62 அடி​யாக உள்​ளது. எனவே, இன்று நீர் திறக்க முடி​யாத நிலை ஏற்​பட்டு உள்​ளது.
அணை​யின் 93 ஆண்டு கால வரலாற்​றில் உரிய காலத்​தில்​(ஜூன் 12) டெல்டா பாசனத்​துக்கு நீர் திறக்​கப்​ப​டா​மல்​போவது இது 62-வது முறை​யாகும். உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறை​யும், நீர் இருப்பு திருப்​தி​கர​மாக இருந்​த​தால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 11 முறை​யும் டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.இந்​தாண்டு குறிப்​பிட்ட நாளில் அணை திறக்​காத​தால், டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 6 லட்​சம் ஏக்​கரில் செய்ய வேண்​டிய குறுவை சாகுபடி​யின் பரப்​பளவு 50 சதவீதம் குறைந்​துள்​ளது. இதனால், பம்​புசெட்பாசன வசதி கொண்ட விவ​சா​யிகள் மட்​டுமே குறுவை சாகுபடி பணி​களை மேற்​கொண்​டுள்​ளனர். அதன்​படி, டெல்டா மாவட்​டங்​களில் தற்​போது சுமார் 3 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டு, இது​வரை 1.75 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், தற்​போது மின் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டு, நெற்​ப​யிர்​கள் காய்ந்து வரு​வ​தால் ஆங்​காங்கே விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். எனவே, விவ​சா​யிகளுக்கு 20 மணி நேரம் மும்​முனை மின்​சா​ரம் வழங்​கு​வதுடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்​டத்தை அறிவிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளனர்.
காவிரி விவசாயிகள்: இதுகுறித்து காவிரி உரிமை செயற்​பாட்​டாளர் வெ.ஜீவக்​கு​மார் கூறியது: மேட்​டூர் அணை​யின் நீர் இருப்பு என்​பது இந்​தாண்டு தொடக்​கத்​திலிருந்தே குறை​வாகத் தான் உள்​ளது. ஆனால், நமக்கு உரிய தண்​ணீரை கர்​நாடக அரசிட​மிருந்து பெற தமிழக அரசு எந்த முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை.