Home மாவட்டங்கள் பெங்களூர் டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு

சென்னை: ஜூன் 11-
அரசுப் பயண​மாக டெல்லி சென்​றுள்ள தமிழக முதல்​வர் விஜய், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் மற்​றும் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்​தித்து பேசி​னார். இன்று நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்​தில் பங்கேற்கிறார்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக தலை​வர் விஜய், கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார். அதன்​பின் அரசுப் பயண​மாக கடந்த மே 27-ம் தேதி முதல் முறை​யாக முதல்​வர் விஜய் டெல்லி சென்​றார். அங்கு பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​து, பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை வழங்​கி​னார்.
தொடர்ந்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை​யும் சந்​தித்த முதல்​வர் விஜய், தமிழகத்​துக்​குத் வேண்​டிய நிலுவை நிதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டு​கோள் விடுத்​தார். பின்​னர் டெல்லி பயணத்தை முடித்​துக் கொண்டு மறு​நாளே சென்னை திரும்​பி​னார்.
இந்​நிலை​யில் 2-வது முறை 3 நாள் அரசுப் பயண​மாக முதல்​வர் விஜய் நேற்று டெல்லி சென்​றார். சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் நேற்று காலை 10 மணிக்​குப் புறப்​பட்டு டெல்லி சென்​றடைந்த முதல்​வர் விஜய், முதலில் அங்​குள்ள தமிழக அரசின் இல்​லத்​துக்​குச் சென்​றார். அங்கு அவரை தமிழக அரசு அதி​காரி​கள் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றனர். தொடர்ந்து அவருக்​கு காவல் துறை​யின் அணிவகுப்பு மரி​யாதை வழங்​கப்​பட்​டது.
அதன்​பின்​னர் முதல்​வர் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்​தார். மாலை 4 மணிக்​குத் தமிழக அரசு இல்​லத்​தில் இருந்து குடியரசுத் தலை​வர் மாளி​கைக்கு அவர் காரில் புறப்​பட்டு சென்​றார்.
அங்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை, முதல்​வர் விஜய் மரி​யாதை நிமித்​த​மாகச் சந்​தித்​துப் பேசி​னார். அதைத் தொடர்ந்து தமிழகத்​தைச் சேர்ந்த குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணனை​யும் அவரது இல்​லத்​தில் விஜய் சந்தித்தார்.
இதையடுத்து காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்தி மற்​றும் ராகுல் காந்​தி​யை, அவர்​களது இல்​லத்​தில் முதல்​வர் விஜய் நேரில் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது ஆட்​சி​யமைக்க காங்​கிரஸ் ஆதரவு தந்​ததற்கு விஜய் நன்றி தெரி​வித்​த​தாக​வும், தமிழகத்​தில் தவெக கூட்​ட​ணி​யைப் பலப்​படுத்த காங்​கிரஸ் உறு​துணை​யாக இருக்க வேண்​டும் என்றும் வலி​யுறுத்​தி​ய​தாக​தகவல்​கள் கிடைத்​துள்​ளன.