Home விளையாட்டு டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது கொல்கத்தா

டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது கொல்கத்தா

புதுடெல்லி, மே 9- நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் ஃபின் ஆலன் சதம் விளாசினார். தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸை இழந்த டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இதில் பதும் நிசாங்கா 50, அசுதோஷ் சர்மா 39, கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் பந்து வீசிய அனுகுல் ராய், கார்த்திக் தியாகி 2 மற்றும் வைபவ், நரேன், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 143 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது. அந்த அணிக்காக கேப்டன் ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இன்னிங்ஸை தொடங்கினர். ரஹானே 13 மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னில் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஃபின் ஆலனும், கேமரூன் கிரீனும். இதில் ஃபின் ஆலன் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். கிரீன், 27 பந்துகளில் 33 ரன்கள் எதுத்தார். 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதல் 6 ஆட்டங்களில் 5 தோல்வியை தழுவி இருந்தது கொல்கத்தா அணி. மழை காரணமாக ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.