Home செய்திகள் தேசிய செய்திகள் ‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ – பாரதிராஜாவுக்கு மோடி இரங்கல்

‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ – பாரதிராஜாவுக்கு மோடி இரங்கல்

புது டெல்லி: ஜூன் 11-
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.’ எனத் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்​குறை​வால் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்​டிலேயே சிகிச்சை பெற்று வந்த இயக்​குநர் இமயம் பத்மஸ்ரீ பார​தி​ராஜா சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளை​ய​ராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளா​மானோர் அஞ்​சலி செலுத்​தினர்.
அஞ்​சலிக்​குப் பிறகு பார​தி​ராஜா​வின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு நேற்று எடுத்து செல்​லப்​பட்​டது. அங்​கிருந்து வத்​தல​குண்டு அரு​கே​யுள்ள அவருடைய காட்​ரோட் தோட்​டத்​துக்கு எடுத்து செல்​லப்​பட்டு, பார​தி​ராஜா​வின் உடலுக்கு இன்று மாலை அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெறுகிறது.