Home மாவட்டங்கள் பெங்களூர் வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு

வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆசிரியை மாரடைப்பில் சாவு

பெங்களூரு: ஜூலை 24-
பெங்களூரு குருபரஹள்ளி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷமந்த குமாரி (44). இவர் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்புப் பணியில் (பி.எல்.ஓ) ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மேலதிகாரிகள் வேலையை சீக்கிரம் முடிக்கும்படி அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், அவருக்கு சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் எகிறியது.
அதனையடுத்து தீவிர காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆசிரியை ஷமந்த குமாரி, சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். மேலதிகாரிகளின் வேலைப் பளுவே அவரது சாவுக்குக் காரணம் என குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.