Home செய்திகள் தேசிய செய்திகள் திருச்சி கார்குழலிக்கு.. மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

திருச்சி கார்குழலிக்கு.. மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

டெல்லி, மே 2- திருச்சியை சேர்ந்த கார்குழலி, தனது கணவர் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நடந்த படகு விபத்தில் மொத்த குடும்பமும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்துக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் 2026 தகவல்களுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்குழலி (38). இவரது கணவர் காமராஜ்(38), மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு புவீந்தரன் (11), தமிழ்வேந்தன் (5) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அப்பாவை பார்க்க வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்து வந்திருக்கின்றன. கோடை விடுமுறைக்கு போகலாம் என்று தாய் கார்குழலி சமாதானம் செய்து வந்த நிலையில், விடுமுறையும் தொடங்கியிருக்கிறது. எனவே, குழந்தைகளை அழைத்துக்கொண்டு மத்தியப் பிரதேசம் சென்றிருக்கிறார் கார்குழலி. இவர்களுடன், காமராஜின் மைத்துனரான திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த வேந்தன், அவருடைய மனைவி சவுபாக்கியவதி மற்றும் இவர்களின் மகள் ஒருவர் என 3 பேரும் கார்குழலி உடன் சென்றிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம் சென்ற இவர்கள், அங்குள்ள ஜபல்பூர் பார்கி அணையை சுற்றிப்பார்க்க காமராஜுடன் சென்றிருக்கிறார்கள். அணையில் படகு சவாரி செய்ய குழந்தைகள் விருப்பப்படவே, டிக்கெட் எடுத்து 8 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு அணையின் நடு பகுதிக்கு சென்றிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுந்து இருக்கிறது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பயணிகள் உடனடியாக லைப் ஜாக்கெட்டை தேடியிருக்கிறார்கள். காமராஜும் ஜாக்கெட்களை எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், லைப் ஜாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குள் படகு முழுவதுமாக நீரில் மூழ்க, பயணிகள் தத்தளித்துள்ளனர்.
படகில் மொத்தம் 40 பேர் இருந்திருக்கின்றனர். இதில், 28 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்தில் கார்குழலி அவரது மூத்த மகன் புவீந்தரன், சவுபாக்கியவதி மற்றும் அவரது மகள் என 5 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படகு அணையின் நடு பகுதிக்கு செல்வதற்கு முன்னரே, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக மற்ற படகு ஓட்டுநர்கள் எச்சரித்துள்ளனர்.