திருப்பத்தூர் மண்ணில் தோண்ட தோண்ட தங்கம்

வேலூர்: டிசம்பர் 29-
திருப்பத்தூரில் விவசாய நிலத்தை இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியின்போது, தங்கக் காசுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை நேற்று முதல் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. மேலும் தங்க நாணயங்கள் கிடைத்தது தொடர்பான விசாரணையும் விரிவடைந்துள்ளன.. உண்மையிலேயே என்ன நடந்தது திருப்பத்தூரில்? திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.. அப்போதுதான் ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. 86 தங்க நாணயங்கள் கிடைத்த பிறகும்கூட அதிகாரிகளிடம் ஆதவன் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.எனினும் தகவலறிந்து வந்த விஏஓ விசாரணை நடத்தி வருகிறார்.. 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றி உள்ளார்.. உண்மையிலேயே என்ன நடந்தது? திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆதவன் என்பவருக்கு 55 வயதாகிறது.. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது.. அந்த நிலத்தில் அதிகளவில் கற்கள் இருந்து வந்ததால், அதனை சமன் செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 22ம் தேதி பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டார்…
திருப்பத்தூர் மண்ணில் தோண்ட தோண்ட சம்பவத்தன்று நிலத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தபோது பழங்கால சிறிய குடுவை கிடைத்துள்ளது.. பூமிக்கு அடியில் எது கிடைத்தாலும் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.. ஆனால், ஆதவன் குடும்பத்தினர் அந்த குடுவையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக மூடியை உடைத்துள்ளனர்.. பிறகு உள்ளே பார்த்தபோது தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சுந்தரம்பள்ளி விஏஒ மற்றும் கந்திலி போலீஸாருக்கு தங்க புதையல் குறித்து ஆதவன் குடும்பத்தினர் நேற்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸாரும், வருவாய் துறையினரும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குடுவையில் தங்க நாணயங்கள் வட்டாட்சியர் நவநீதனிடம் தங்க நாணயங்கள் அடங்கிய குடுவையை ஆதவன் குடும்பத்தினர் ஒப்படைத்தனர். அந்த குடுவையில் 84 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
நெற்றி பொட்டு சைஸில் தங்க காசுகள் மேலும், குடுவையின் மூடி உடைந்திருப்பதும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து கந்திலி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், நிலத்தின் உரிமையாளர் ஆதவன் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.