Home செய்திகள் தேசிய செய்திகள் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகாரமும் பின்னணியும்

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகாரமும் பின்னணியும்

நாசிக், ஏப்ரல் 18- நாசிக் டிசிஎஸ் அலு​வலக லவ் ஜிகாத் விவ​காரம் ஒட்​டுமொத்த நாட்​டை​யும் உலுக்கி உள்​ளது. அந்த அலுவலகத்​தில் ஏராள​மான பெண் ஊழியர்​கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்​ளனர். பலர் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளனர். மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் டாடா கன்​சல்​டன்சி சர்​வீசஸ் (டிசிஎஸ்) நிறு​வனத்​தின் பிபிஓ அலு​வல​கம் செயல்​படு​கிறது. அங்கு 150 ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இதில் பெரும்​பாலானோர் பெண்​கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் பணி​யாற்​றும் 9 பெண் ஊழியர்​கள் கடந்த பிப்​ர​வரி மாதம் நாசிக் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரகசி​ய​மாக புகார் மனுக்​களை அளித்​தனர். அதில், டிசிஎஸ் அலு​வல​கத்​தின் குறிப்​பிட்ட சில அதி​காரி​கள் கும்​பலாக செயல்​பட்டு பெண் ஊழியர்​களை பாலியல் வன்​கொடுமை செய்​வ​தாக​வும், லவ் ஜிகாத் பெயரில் கட்​டாய மதமாற்​றம் செய்​தாக​வும் குற்​றம் சாட்​டினர். 7 பேர் கைது இந்த புகார்​களை விசா​ரிக்க நாசிக் காவல் ஆணை​யரகம் சார்​பில் 7 பெண் போலீஸ் அதி​காரி​கள் அடங்​கிய தனிப்​படை அமைக்​கப்​பட்​டது. அவர்​கள் நாசிக் டிசிஎஸ் அலு​வல​கத்​தில் துப்​புரவு ஊழியர்​களாக பணி​யில் சேர்ந்​து, குற்​றம் சாட்​டப்​பட்ட மூத்த அதி​காரி​களின் நடவடிக்​கைகளை 40 நாட்​கள் வரை ரகசி​ய​மாகக் கண்​காணித்​தனர். அப்​போது டிசிஎஸ் பெண் ஊழியர்​கள் அளித்த புகார் மனுக்​கள் உண்மை என்​பது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து 9 பெண் ஊழியர்​கள் அளித்த புகார் மனுக்​களின்​பேரில் 9 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதன்​பேரில் நாசிக் டிசிஎஸ் அலு​வலக மூத்த அதி​காரி​கள் தவுசிப் அத்​தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்​சா​ரி, ஷபி ஷேக், பெண் ஊழியர் அஸ்​வினி சனானி ஆகிய 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். மனித வள மேம்​பாட்டு அதி​காரி நீடா கான் என்​பவர் தலைமறை​வாகி விட்​டார். அவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக நாசிக் காவல் ஆணை​யரகம் சார்​பில் 12 உயர​தி​காரி​கள் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த குழு டிசிஎஸ் அலு​வலக ஊழியர்​கள் அனை​வரிட​மும் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது. மகா​ராஷ்டிர முதல்​வர் எச்​சரிக்கை மேற்​கு​வங்க தேர்​தலை​யொட்டி மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வுக்கு ஆதர​வாக வாக்கு சேகரித்​தார். முன்​ன​தாக அவர் நிருபர்​களிடம் கூறும்​போது, “நாசிக் கார்​பரேட் லவ் ஜிகாத் விவ​காரம் தொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. இதில் தொடர்​புடைய​வர்​கள் யாரும் தப்ப முடி​யாது. இந்த சதி​யின் பின்​னணி​யில் இருக்​கும் அனை​வரை​யும் கண்​டு​பிடித்து கடுமை​யான தண்​டனையை பெற்​றுத் தரு​வோம். இதுதொடர்​பாக மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களின் உதவியை கோரி உள்​ளோம்’’ என்று தெரி​வித்​தார். நாசிக் டிசிஎஸ் அலு​வல​கம் மூடப்​பட்டு 150 ஊழியர்​களும் வீட்​டில் இருந்து பணி​யாற்ற உத்​தர​விடப்​பட்டு உள்​ளது.