
நாசிக்: ஏப்ரல் 27-
நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை மற்றும் மதமாற்ற கட்டாயப்படுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கில் நிதா கான் மற்றும் போலீஸ் தரப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. டாடா கல்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் நபர்களுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் கூறுகையில், எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய தவுசிப் பிலால் அத்தர் என்ற சீனியர் ஊழியர் என்னுடன் நட்பாக பழகினார். பின்னர் ரம்ஜான் பண்டிகைக்காக தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நான் சென்றபோது எனக்கு முதலில் சேமியா பாயாசம் வழங்கினர். அதை சாப்பிட்டதும், போதைப் பொருள் சாப்பிட்டது போல் குழப்பமான மனநிலைக்கு சென்றேன். எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்த தவுசிப், அவற்றை பில்லி சூனியம் மூலம் சரி செய்து விடலாம் என கூறினார். பின்னர் எனக்கு குல்லா அணிவித்து படம் பிடித்து, அந்த போட்டோவை அலுவலக நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றினார். என்னுடன் நட்பாக பழகினாலும், எனது பணித் திறன் மோசமாக இருப்பதாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி, என்னை நிலைகுலைய செய்து, நான் அவர்களை எப்போதும் சார்ந்திருக்கும்படியான நிலைக்கு கொண்டு வந்தார் எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி தவுசிப் பிலால், அத்தர், டேனிஷ் ஷேக், ஷாருக் உசேன், ரஷா ரஃபிக் மேமன் ஆகியோரை மும்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பினரும், புகார்தாரரும் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நீடா கானை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.




















