Home மாவட்டங்கள் பெங்களூர் நெஞ்சு பதறுது.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரம்

நெஞ்சு பதறுது.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரம்

பெங்களூர், ஜூலை 2- கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள டே கேர் எனப்படும் மழலையர் காப்பகத்தில் பிஞ்சு குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அழுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள் போடுவது, பாத்ரூமில் தனியாக அடைத்து வைப்பது போன்ற கொடூரமான செயல்களைச் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்த காலத்தில் குழந்தைகளை 24*7 மணி நேரமும் பெற்றோரால் பார்த்து கொள்ள முடிவதில்லை. தாத்தா- பாட்டிகளும் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். பெரும்பாலான டே கேர்களில் குழந்தைகளை நன்றாக பார்த்து கொண்டாலும், சில டே கேர்கள் மோசமாக உள்ளன. கொடூரம் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு மழலையர் காப்பகத்தில்.. இரண்டு வயது சிறு குழந்தைகள் அழுததற்காக அவர்களுக்குக் குரூரமான தண்டனைகள் வழங்கப்பட்ட அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பன்னாட்டு நிறுவனமான கேப்ஜெமினியின் பெங்களூர் வளாகத்தில் இயங்கி வரும் மழலையர் காப்பகத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தைகளைத் துன்புறுத்தியதாக ஐந்து பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மழலையர் காப்பகத்தை நேரடியாக கேப்ஜெமினி நிறுவனம் நடத்துகிறதா அல்லது கண்டிராக்ட் மூலம் வேறு நிறுவனம் நடத்துகிறது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை. அதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.