
பெங்களூரு: மே 28-
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இஸ்லாமியர்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைப்பது வழக்கம். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12-வது மாதமான துல்ஹஜில் இது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் சென்று இஸ்லாமியர்கள் தொழுது, புது ஆடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினார்கள். இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடலூர் விருத்தாசலம், நாகை வேதாரண்யம், புதுக்கோட்டை, சிவகங்கை காரைக்குடியில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புது ஆடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, தொழுகையில் ஈடுபட்டனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் பக்ரீத் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


















