Home மாவட்டங்கள் பெங்களூர் பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன

பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன

சென்னை: மே 28-
இரு அணி​களாகப் பிரிந்து செயல்​பட்​டு​வந்த அதி​முக​வினர், ஒன்​றாக இணைந்​தனர்.
மேலும், தகுதி நீக்​கம் கோரி சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் அளித்த கடிதங்​களைத் திரும்​பப் பெறு​வ​தாக​வும் கடிதம் அளித்​தனர்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. அதைத்​தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர். மேலும், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்​தனர்.
தகுதி நீக்கம் கோரி கடிதம்: அதைத்​தொடர்ந்​து, இரு அணி​யினரும் சட்​டப்​பேரவை அதி​முக தலை​வர், கொற​டாவைத் தேர்ந்​தெடுத்து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம் கடிதம் அளித்​திருந்​தனர். அதே​போல், இரு அணி​யினரும் எதிரணி​யைச் சேர்ந்த எம்​எல்​ஏ.க்​களை கட்​சித் தாவல் தடை சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்​கம் செய்​யு​மாறும் அவரிடம் கடிதம் அளித்​தனர்.
இதற்​கிடையே, சி.​வி.சண்​முகம் அணி​யில் இருந்த மரகதம் குமர​வேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர். மேலும், ஆற்​காடு எம்​எல்ஏ சுகு​மார் உள்​ளிட்ட 6 எம்​எல்​ஏ.க்​கள், பழனி​சாமி அணிக்கு மாறி​னார். இதனால் சி.​வி.சண்​முகம் அணி​யின் பலம் 15 ஆகக் குறைந்​தது.
பழனிசாமியுடன் சந்திப்பு: இந்​நிலை​யில், சி.​வி.சண்​முகம் அணி எம்​எல்​ஏக்​களான எஸ்​.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் பழனி​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப்பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச் சென்​றனர். அங்கு இரு அணி​கள் சார்​பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலை​வரிடம் ஏற்​கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்​தனர்.
மேலும், அதி​முக​வின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக பழனி​சாமி, கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரை தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர். இந்த நிகழ்வில், சி.​வி.சண்​முகம் உடன் வரவில்​லை. அவர் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகத் தெரி​கிறது. அவருடன் மூத்த நிர்​வாகி​கள் மேற்​கொண்ட சமரச​மும் தோல்​வி​யில்முடிந்​த​தாகக் கூறப்​படு​கிறது.