Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரு அருகே சங்கிலித் தொடர் விபத்து

பெங்களூரு அருகே சங்கிலித் தொடர் விபத்து

பெங்களூர்: செப். 1-
தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய சாலை மேம்பாலத்தில் நேற்றிரவு 9 மணி அளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பின்னால் அதிவேகமாக வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த தொடர் விபத்தில் 1 டிப்பர் லாரி, 4 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவலர் (TT) வாகனம் ஆகிய 5 வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர விபத்தில் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அனைவரும் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.