Home செய்திகள் தேசிய செய்திகள் மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது

மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது

புதுடெல்லி: செப். 1-
உத்தர பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 4-ம் தேதி நொய்டாவில் உள்ள உறவினரைச் சந்திக்க பேருந்தில் சென்றார். கனமழையும் இருளும் நிலவியதால், அவர் தவறுதலாக பாரி சவுக் பகுதியில் இறங்கினார்.
அங்கு உதவி கோரி சைகை செய்த மாணவியைக் கண்டு, ஓர் பேருந்து நின்றது. ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர், பேருந்து நொய்டா செக்டார் 63-க்குச் செல்வதாகக் கூறி, மாணவியை பேருந்தில் ஏற்றிக்கொண்டனர். பின்னர், இருவரும் சேர்ந்து மாணவியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, குல்தீப் மற்றும் சந்தீப் ஆகியோர் தப்பி ஓடினர். இந்த விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லதா குப்தா கூறுகையில், “இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிக அவசியம்,” என்றார்.