Home மாவட்டங்கள் பெங்களூர் முதல்வர் விஜய் மேட்டூரில் நீர் திறந்து வைத்தார்

முதல்வர் விஜய் மேட்டூரில் நீர் திறந்து வைத்தார்

மேட்டூர்: செப். 1-
மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன் மூலம், 13 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.
நடப்பாண்டு அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் நீர் திறக்கவில்லை. பாசனத்துக்கு நீர் திறக்க அணை நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். நேற்று அணை நீர்மட்டம், 91.15 அடியாக, நீர் இருப்பு, 53.97 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 11,501 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் இன்று (செப்.,01) சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக முதல்வர் விஜய் மேட்டூர் சென்றார். திறந்தவெளி வாகனத்தில் வேட்டி, சட்டை அணிந்து வந்த முதல்வர் விஜய்யை சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர் மக்களை பார்த்து கை அசைத்தப்படியே சென்றார். பிறகு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் நீரை திறந்து வைத்தார்.
இதன் மூலம் 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். முதல்வர் வருகையை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி., அன்பு தலைமையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., 4 டி.ஐ.ஜி.,க்கள், 16 எஸ்.பி.,க்கள், 15 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 39 டி.எஸ்.பி.,க்கள், 80 இன்ஸ்பெக் டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் என, 3,804 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.