Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரு–சென்னை புல்லட் ரயில் 73 நிமிடங்களில்

பெங்களூரு–சென்னை புல்லட் ரயில் 73 நிமிடங்களில்

பெங்களூரு, நவ. 3-
தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 73 நிமிடங்களில் செல்ல முடியும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதே வழித்தடத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாதுக்கு 2 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார். பெங்களூரு–மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், வரும் காலங்களில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கான புல்லட் ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மும்பை–அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த ரயில் சேவை தொடங்கப்படும். அடுத்த அதிவேக ரயில் திட்டங்களில் பெங்களூரு–புனே புல்லட் ரயில் வழித்தடமும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. பெங்களூருவில் இருந்து ஹூப்ளி வழியாக புனே வரை, ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வழித்தடம் அமையும். பெங்களூரு–மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவைக்கான மின்சாரப் பணிகள் முடிவடைந்துள்ளன.