Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.57 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

பெங்களூரு: ஜூன் 8-
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய ஒரு பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவருடைய ‘செக்-இன்’ உடமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, அவரது பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.20 கிலோ ‘ஹைட்ரோபோனிக்’ ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3.57 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்இது தொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்தனர். அவர் எதற்காக கஞ்சாவை கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.