Home செய்திகள் தேசிய செய்திகள் பொதுக்கூட்டத்தில் ஓவியம் அளித்த சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம்

பொதுக்கூட்டத்தில் ஓவியம் அளித்த சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம்

முர்ஷிதாபாத்: ஏப்ரல் 27-
பொதுக்​கூட்​டத்​தில் ஓவியம் வழங்​கிய சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்து கடிதம் எழு​தி​யுள்​ளார்.
மேற்​கு​வங்​கம் முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் ஜாங்​கிப்​பூர் பகு​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். பிரதமர் பங்​கேற்​கும் கூட்​டங்​களில் எல்​லாம், மோடி​யின் உருவ படத்தை வரைந்து மாணவ, மாணவி​கள் உற்​சாகத்​துடன் காட்​டு​கின்​றனர். அந்த படங்​களை பிரதமர் மோடி பெற்​றுக் கொள்​கிறார்.
இந்​நிலை​யில் மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெற்ற கூட்​டத்​தில் வரைபடத்தை அன்​பளிப்​பாக வழங்​கிய சிறுமி பிரிஸ்தி மொந்​தலக்கு பிரதமர் மோடி கடந்த 24-ம் தேதி கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அதில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது: மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில், உன்​னிடம் பெறப்​பட்ட அழகான வரைபடம் மிகுந்த மகிழ்ச்​சியை அளிக்​கிறது.
உனது முயற்ச்​சி, அர்ப்​பணிப்பு ஆகியவை உனது வரைபடத்​தில் பிர​திபலிக்​கிறது. உன்​னைப் போன்ற மக்​களிடம் இருந்து பெறப்​படும் அன்பு என்​னுள் நீடித்த தாக்​கத்தை ஏற்​படுத்​தி, நாட்டை முன்​னேற்​றி, இளைஞர்​களின் எதிர்​காலத்​துக்​காக புதிய இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும் என்ற எனது உறு​தியை வலுப்​படுத்​துகிறது.