Home செய்திகள் தேசிய செய்திகள் போதைப் பொருள் விவகாரம்: போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

போதைப் பொருள் விவகாரம்: போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

கன்னா, நவ. 3-
பஞ்சாப் மாநிலம் கன்னா மாவட்டத்தில், சிவசேனா நிர்வாகியின் வீட்டில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போதைப் பொருட்களை ரகசியமாக வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தக் காட்சிகளில், சாதாரண உடையில் வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் படுக்கையறையில் உள்ள மெத்தையின் அடியில் ஒரு பொட்டலத்தை மறைத்து வைப்பது போன்று பதிவாகியுள்ளது. சிறிது நேரத்துக்குப் பிறகு சீருடையில் வரும் போலீஸார் அந்த அறைக்குள் நுழைந்து, அந்தப் பொட்டலத்தை போதைப் பொருள் எனக் கூறி பறிமுதல் செய்வதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக கன்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்பன் அலுவாலியா கூறுகையில், “சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்பி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.