Home விளையாட்டு போஸ்னியாவை வீழ்த்திய அமெரிக்கா

போஸ்னியாவை வீழ்த்திய அமெரிக்கா

சான்டா கிளாரா, ஜூலை 3- பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் சான்டா கிளா​ரா​வில் நடை​பெற்ற நாக் அவுட் சுற்​றில் அமெரிக்கா, போஸ்னியா & ஹெர்​சகோ​வினா அணி​யுடன் மோதி​யது. போட்​டி​யின் தொடக்​கத்​தில் போஸ்னியா அணி அமெரிக்கா​வுக்​குக் கடுமை​யான சவால்​களைக் கொடுத்து கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை உரு​வாக்​கியது. 31-வது நிமிடத்​தில் அமெரிக்க அணி​யின் வீரர் ஃபொலாரின் பாலோகன் அடித்த கோல் ஆஃப்​சைடு என மறுக்​கப்​பட்​டது. 45-வது நிமிடத்​தில் மாலிக் திலெமன்ஸ் கொடுத்த நேர்த்​தி​யான பாஸை கட்​டுக்​குள் கொண்டு வந்த ஃபொலாரின் பாலோகன், போஸ்​னியா பின்கள வீரர்​களின் தடுப்​பை​யும் மீறி தாழ்​வான ஷாட் மூலம் பந்தை கோல் வலைக்​குள் தள்​ளி​னார். இதனால் முதல் பாதி​யில் அமெரிக்கா 1-0 என முன்​னிலை பெற்​றது. 64-வது நிமிடத்​தில் போஸ்​னியா வீரர் தாரிக் முஹாரெமோ​விச்சை ஃபவுல் செய்​ததற்​காக, விஏஆர் பரிசீலனைக்​குப் பிறகு அமெரிக்​கா​வின் ஃபொலாரின் பாலோக​னுக்கு ரெட் கார்டு காண்பிக்​கப்​பட்​டது. இதனால் அமெரிக்கா 10 வீரர்​களு​டன் விளையாட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 78-வது நிமிடத்தில் அமெரிக்க அணி​யின் நட்​சத்​திர வீர​ரான கிறிஸ்​டியன் புலிசிக் அடித்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்​கப்​பட்​டது. 82-வது நிமிடத்​தில் அமெரிக்க அணிக்கு ஃப்​ரீ-கிக் வாய்ப்பு கிடைத்​தது. இதில் பாக்​ஸின் வெளிப்​பகு​தி​யில் இருந்து மாலிக் திலெமன்ஸ் அடித்த கர்​லிங் ஷாட் போஸ்​னியா தடுப்​புச் சுவரைத் தாண்டி கோல் வலை​யின் மேல் கார்​னரை துளைத்​தது. இதனால் அமெரிக்க அணி 2-0 என முன்​னிலை பெற்​றது. கடைசி வரை போராடி​யும் போஸ்​னியா & ஹெர்​சகோ​வினா அணி​யால் பதிலடி கொடுக்க முடி​யாமல் போனது. முடி​வில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது.