Home செய்திகள் தேசிய செய்திகள் மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்

மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்

புதுடெல்லி, ஏப்ரல் 30- ம​கா​ராஷ்டி​ரா​வில் ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருக்​கிறதா என்​பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி​ பார்ப்​புப் பணி நடை​பெற உள்​ளது. இது குறித்து மகா​ராஷ்டிர போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் பிரதாப் சர்​நாயக் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “இந்​தச் சோதனை​யின் போது ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிய​வில்லை என்​றால் ஓட்​டுநர் உரிமம் ரத்து ஆகாது. ஆனால், மராத்தி மொழி கற்க கால அவகாசம் அளிக்​கப்​படும். ஏற்கெனவே உள்ள சட்ட விதி​களின்​படி மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார். ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருக்​கிறதா என்​பதை அறி​யும் பணி மாநிலம் முழு​வதும் உள்ள 59 மண்​டலப் போக்குவரத்து அலு​வல​கப் பகு​தி​களில் நடை​பெறுகிறது. சமீபத்தில் மும்பை மீரா பாந்​தர் பகு​தி​யில் நடத்​தப்​பட்ட சோதனை​யில், 3,443 ஆட்டோ ஓட்​டுநர்​களில் 565 பேருக்கு மராத்தி மொழி பேச தெரிய​வில்லை என்ற விவரம் தெரிந்​தது. சிவசே​னாவைச் சேர்ந்த அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக், சில நாட்களுக்கு முன்​னர் கூறும்​போது, “ம​கா​ராஷ்டி​ரா​வில் யாராவது தொழில் செய்ய விரும்​பி​னால், அவர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருப்​பது கட்​டா​யம். இதற்கு ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர் சங்கப் பிர​தி​நி​தி​கள் ஆதரவு அளித்​துள்​ளனர்” எனக் கூறியிருந்தார்.மராத்தி மொழி கற்க விரும்​பும் ஓட்​டுநர்​களுக்கு மண்​டலப் போக்கு​வரத்து அலு​வல​கங்​களி​லேயே ஏற்​பாடு செய்​யப்பட உள்ளது. மேலும் கொங்​கன் மராத்தி சாகித்ய பரிஷத், மும்பை மராத்தி சாகித்ய சங்​கம் ஆகியவை இதற்​கான பயிற்​சிகளை வழங்க உள்​ளன. மராத்தி மொழிப் பயிற்​சியை முடிக்​கும் ஓட்டுநர்களுக்கு மாநில அரசு சார்​பில் சான்​றிதழ் வழங்​கப்​படும். இந்​தச் சான்​றிதழ் ஓட்​டுநர் உரிமத்​தைப் புதுப்​பிக்க தேவைப்​படும் என்று அறி​வுறுத்​தப்​பட்டுள்​ளது. மகா​ராஷ்டிர அரசி​யலில் மராத்தி மொழி மற்​றும் மண்​ணின் மைந்​தருக்கு வேலை போன்ற முழக்​கங்​கள் முன்​னாள் முதல்​வரும் சிவசேனா நிறு​வனரு​மான பால் தாக்​கரே முதன் முதலில் தொடங்கி வைத்​திருந்​தார். இந்த முறை அதை அரசு சார்​பில் ஷிண்​டே பிரி​வின்​ சிவசே​னா கையில்​ எடுத்​துள்​ளது குறிப்பிடத்தக்​கது.