
சான் பிரான்சிஸ்கோ, ஆக. 17- அமெரிக்காவில் ஏஐ நடத்தி வரும் கடையில் இருந்து ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக தாமதமாக வேலைக்கு வந்ததால் அவரை பணிநீக்கம் செய்யும் முடிவை ஏஐ மேனேஜர் எடுத்துள்ளது. இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ வந்துவிட்டது. ஏஐ ஆதிக்கத்தால் நன்மைகள் இருந்தாலும் கூட இதனால் வேலையிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க ஏஐ காரணமாக ஏற்படும் வேலையிழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே நாம் இதுவரை யோசிக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாமதம் ஆண்டன் லேப்ஸ் என்ற நிறுவனம் சோதனை முறையில் ஆண்டன் மார்கெட் என்ற கடையை நடத்தி வருகிறது. இந்த கடையின் மேனேஜர் மனிதர் இல்லை. மாறாக லூனா என்ற ஏஐ செயல்பட்டு வருகிறது. அந்த ஏஐ தான் ஊழியர் ஒருவரை டிஸ்மிஸ் செய்துள்ளது. அதாவது அந்த கடையில் பணிபுரிந்த ஒரு ஊழியர், தனது வேலை நேரத்தில் 23 ஷிப்ட்களில் 17 முறை தாமதமாக பணிக்கு வந்துள்ளார். வேலையை விட்டு தூக்கியது இதையடுத்து அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குமாறு லூனா பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த உயர் அதிகாரிகள், இறுதியாக பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் மூலம் மனித ஊழியர் ஒருவர் முதல்முறையாக ஏஐ எடுத்த முடிவால் வேலையை இழந்துள்ளார். அதேநேரம் ஏஐ தான் முழுமையாக இந்த முடிவை எடுத்தது என்றும் சொல்ல முடியாது என்கிறார்கள். அதாவது லூனா ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்பு ஊழியர்களின் வருகை மற்றும் நேரம் தொடர்பாக ஒரு கொள்கையை உருவாக்கியிருந்தது. அதாவது தொடர்ச்சியாக பணிக்கு லேட்டாக வந்தால் பணி நீக்கம் செய்யலாம் என்ற விதியை உருவாக்கி இருந்தது. ஆனால், பின்னர் அந்த விதிமுறையை லூனாவே மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட ஊழியர் பல மாதங்களாக தொடர்ந்து தாமதமாக வந்தபோதும், அவரை லூனா ஏஐ பணிநீக்கம் செய்யவில்லையாம்.
















