Home மாவட்டங்கள் பெங்களூர் மின் பங்கீடு: மின் தடைகளை சமாளிக்க புதிய திட்டங்கள்

மின் பங்கீடு: மின் தடைகளை சமாளிக்க புதிய திட்டங்கள்

சென்னை: செப்டம்பர் 1
சென்னையில் பருவ மழை மற்றும் கோடைக்காலங்களில் ஏற்படும் மின் தடைகளை சமாளிக்க, 36 புதிய துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் அமைக்கப்படும். சேதமடைந்த மற்றும் பழைய கேபிள்கள், மின் கடத்திகள் மாற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக ரூ.1,762 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் செமி கண்டக்டர் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும், காஞ்சிபுரம், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் ரூ.400 கோடியில் உருவாகி, நிதி மற்றும் நிதிநுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்கும். திருச்சி மற்றும் அதன் அருகில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமையும்.முதல்வர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.