Home பக்தி மாதா திருவிழா கொடியேற்றம்

மாதா திருவிழா கொடியேற்றம்

தஞ்சை, ஆகஸ்ட் 30- லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கம் எழுப்ப, வாணவேடிக்கையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் திருத்தல கலையரங்கில் மாதா மன்றாடு, நற் கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நடைபெற்றன. பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தைகள், அருட் சகோதரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை தினமும் காலை 5 மணிக்கு பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல் கோயில், கீழ் கோயில் ஆகிய இடங்களில் வழிபாடுகள், திருப்பலிகள் நடைபெறுகின்றன. தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். செப்டம்பர் 8-ஆம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.